Friday, November 11, 2011

கேள்வி-பதில்

கேள்வி:நான் முயற்சி செய்யும் அனைத்து விசயங்களும் தோல்வியிலேயே முடிகிறது?என்ன செய்வது?
 பதில்: அப்துல் கலாம் சொன்னது,


       "முடியாது என்று நாம் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ 
       செய்து கொண்டு இருக்கிறான்."
இதனை மனதில் நினைத்துக் கொண்டு அந்த யாரோ ஒருவன் நீங்களாக இருக்க திரும்ப முயற்சி செய்யுங்கள்.
 
உடலில் உள்ள உறுப்புக்களை தானமாக கொடுப்பதற்கு எவ்வளவு நாட்கள்வரை பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
 
 
 பதில்: சிறுநீரகத்தை 72 மணி நேரம் வரையிலும், கல்லீரலை 18 மணி நேரம் வரையிலும், இதயத்தை 5 மணி நேரம் வரையிலும், கணையம் 20 மணி நேரம் வரையிலும் கார்னியா எனப்படும் கண் விழித்திரையை 10 நாட்கள் வரையிலும் தோல், எலும்பு,இதயத்தின் வால்வுகள் போன்றவற்றை 5 வருட காலம் வரையிலும் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்.
 
கேள்வி : கணவன் , மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?
[குட்டி- கோயம்பத்தூர்]



பதில் : 
ஒரு குட்டிக் கதை..ஆதிசங்கரருடைய பெற்றோர் நீண்டகாலமாகப் பிள்ளை இல்லையே என்று விரதம் இருந்தார்கள் . ஒரு நாள் இரவு, இருவரும் தூங்கிக்கொண்டு இருந்த போது, ஒரே சமயத்தில் இருவர் கனவிலும் இறைவன் தோன்றி , " நீண்ட நாள் வாழும் மோசமான பிள்ளை உனக்கு வேண்டுமா.... கொஞ்சநாள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா ?" என்று கேட்டார் .

அதற்கு கணவன் " அதெப்படி நான் மட்டும் முடிவு செய்ய முடியும். இருங்கள் என் மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன் " என்றார். பின்பு மனைவியை எழுப்பி நடந்ததை சொன்னார். மனைவியும் அதே கேள்வியை கடவுள் தன்னிடமும் கேட்டதாகச் சொன்னார். 

அதற்கு கணவன் "நீ அவருக்கு என்ன பதில் சொன்னாய்?" என்று ஆவலுடன் கேட்க, அதற்கு மனைவி சொல்கிறார் " அதெப்படி நான் மட்டும் முடிவு செய்ய முடியும். எனது கணவரை கேட்டு அப்புறம் சொல்கிறேன் என்று கடவுளிடம் சொல்லிவிட்டேன்."

அவர்களுக்குத் தான் ஆதி சங்கரர் பிறந்தார். கணவன் , மனைவி உறவு இப்படி இருந்தால் வாழ்க்கை ரம்மியமாக இருக்கும்.